close
Choose your channels

'நீயா 2' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்: காரணம் இதுதான்!

Monday, May 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெய், வரலட்சுமி, கேதரின் தெரசா , ராய்லட்சுமி நடிப்பில் உருவான 'நீயா 2' திரைப்படம் மே 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த தகவலின்படி இந்த படம் மே 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இரண்டு வாரங்கள் தள்ளிப்போடும்படி விநியோகிஸ்தர்கள் வேண்டுகோள் வைத்ததால் அந்த வேண்டுகோளை ஏற்று மே 24ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜெய், வரலட்சுமி, கேதரின் தெரசா , ராய்லட்சுமி, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை எல்.சுரேஷ் இயக்கியுள்ளார். ஷபீர் இசையில் ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.