எல்லா பெண்களிடமும் கடலை போட்ட அசல்.. கடைசியில் சிக்கிய சிங்கப்பூர் போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் பிரபலமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோலார் ஒரே வாரத்தில் பிரபலமாகிவிட்டார்.

அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட அனைவரிடமும் கடலை போட ஆரம்பித்து யாரையாவது ஒருவரை காதலித்து ஜோடியாகத்தான் வெளியேற வேண்டும் என்ற முடிவில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாரோ என எண்ண தோன்றுகிறது.

எல்லா பெண்களிடம் கடலை போட்டு யாராவது சிக்கினால் அவரை காதலித்து வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கின்றாரோ என்று அவரது செய்கையில் இருந்து சந்தேகம் ஏற்படுகிறது.

தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி உள்பட பலரிடம் முயற்சித்தும் அவர்கள் சுதாரித்து விலகியதால் கடைசியில் தற்போது சிங்கப்பூர் மாடல் அழகி நிவாஷினியை அவர் மடக்கி விட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.

சிங்கப்பூர் நிவாஷினி பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்த நிலையில் அவரை அசல் கோளாறு பாட்டு பாடியே கவர்ந்து விட்டதாகவே நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

இந்த நிலையில் அசல் குறித்து ஆயிஷா நிவாஷினியிடம் போட்டு கொடுக்க அதற்கு பதிலடியாக ஆயிஷாவை நிவாஷினி நாமினேட் செய்ததால் அசல் மீது அவருக்கு இருக்கும் ஈடுபாடு வெளிப்படையாக தெரிகிறது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அசல் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் உள்ளார் என்பதும் அவர் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதால் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அசல் வெளியேறி விட்டால் நிவாஷினி நிலை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

More News

என்னை மாதிரி கெட்டவ உலகத்துல யாரும் கிடையாது: ஜனனி ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளவும் மற்ற போட்டியாளர்களை கவிழ்க்கவும் செய்யும் முயற்சிகள் .

'வாரிசு' ரிலீஸ் உரிமையை பெற்ற விஜய் பட தயாரிப்பாளர்?

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் முழுமையாக படப்பிடிப்பை முடிந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ராதிகா தீபாவளி கொண்டாடியது எந்த பிரபலத்தின் வீட்டில் தெரியுமா? வைரல் வீடியோ!

நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்கள் தாங்கள் தீபாவளி கொண்டாடியதை புகைப்படமாகவும் வீடியோவாகவும்

எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க... சூடு வைத்த பிக்பாஸ்!

 பிக்பாஸ் போட்டியாளர்கள் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்ற விதி உள்ளது என்பதும் பெரும்பாலான போட்டியாளர்களுக்கு தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் ஒருசில போட்டியாளர்கள் பேசி வருவார்கள்

பிக்பாஸ் நாமினேஷன்.. அப்போ இந்த வாரம் அசல் கோளாரா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும், இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது என்பது தெரிந்ததே.