ஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் ரஜினி பட வில்லன்

விக்ரம் நடித்த 'தில்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய வில்லன் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி, அந்த படத்தில் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இந்த படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’ உள்பட பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 'அநேகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆசிஷ் வித்யார்த்தி, அதையடுத்து கடந்த ஐந்த வருடங்களாக தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். வாய்ப்புகள் தேடிவந்தாலும் கூட, ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லையென்பதால் பல படங்களை தவிர்த்துவிட்டார்.

இந்தநிலையில் ஐந்து வருடங்கள் கழித்து தற்போது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘எக்கோ’ என்கிற படத்தில் நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் 'எக்கோ’படத்தில் இதுவரை நாம் காணாத ஆசிஷ் வித்யார்த்தியை பார்க்கலாம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். தில், தூள், கில்லி, தடம் படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கின்றனர்.

More News

விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தில் பார்த்திபன் - கௌதம் கார்த்திக்!

தளபதி விஜய் நடித்த 'துள்ளாத மனமும் துள்ளும்' விஷ்ணு விஷால் நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் எழில்

அப்பா எடுத்த ஹாட் பிகினி புகைப்படம்; ரகுல் ப்ரித்திசிங்கின் இன்ஸ்டா பதிவு!

கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' 'தேவ்' மற்றும் சூர்யா நடித்த 'என்ஜிகே' உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும், பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த முன்னணி நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்.

சேவை செய்வதாக சினிமாவில் இருந்து விலகிய சிம்பு பட நடிகைக்கு திடீர் திருமணம்!

கடவுளின் ஆணைக்கிணைங்க சேவை செய்ய போவதால் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என சமீபத்தில் அறிவித்த சிம்பு பட நடிகை திடீரென திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது

திருந்த வாய்ப்பில்லை: மீண்டும் சர்ச்சைக்குரிய டைட்டில் வைத்த 'இரண்டாம் குத்து' இயக்குனர்!

தொடர்ச்சியாக அடல்ட் காமெடி திரைப்படங்களை இயக்கி வரும் சந்தோஷ் ஜெயக்குமார் சமீபத்தில் 'இரண்டாம் குத்து' என்ற திரைப்படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்தார்

காதலுக்கு விளக்கம் அளித்த பாலாஜி, குறுக்கிட்ட கமல்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 இன்றோடு 50 நாள் நிறைவு பெறுவதை அடுத்து இன்றைய முதல் புரோமோவில் அது குறித்த காட்சிகள் உள்ளன