close
Choose your channels

பாலிவுட்டுக்கு செல்லும் தமிழின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

Tuesday, February 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் தயாரான பல திரைப்படங்கள் பாலிவுட்டுக்கு சென்று கொண்டிருக்கும் செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்று பாலிவுட்டுக்கு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ’ஓ மை கடவுளே’. விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தை அஷ்வத் மாரிமுத்து என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஒரு சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதன் பின் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழில் இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவே ஹிந்தியிலும் இயக்கப் போகிறார் என்பதும் இந்த படத்திற்கான வசனங்களை உமேஷ் சுக்லா என்பவர் எழுதபோவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரித்த எண்டமோல் ஷைன்ஸ் இந்தியா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே மாநகரம், கைதி உள்ளிட்ட ஒருசில திரைப்படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த வரிசையில் தற்போது ’ஓ மை கடவுளே’ படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.