டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது அசோக் செல்வனின் சூப்பர்ஹிட் திரைப்படம்..!

  • IndiaGlitz, [Friday,February 16 2024]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, பல புதிய தமிழ் சூப்பர் ஹிட் திரைப்படங்களை ஸ்ட்ரீம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது, நடிகர் அசோக் செல்வனின் நடிப்பில் உருவான “சபா நாயகன்” திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்து வருகிறது.

அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர் நடிப்பில், இயக்குநர் C S கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான லைட் ஹார்ட்டடு ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம் சபா நாயகன். ரசிகர்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் ஒரு ஃபீல் குட் ரொமான்டிக் காமெடிப்படமாக உருவான இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஒரு இளைஞனின் பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை கல்லூரிக்கு பின்னான வாழ்க்கை என மூன்று காலகட்டத்தில் அவன் சந்திக்கும் பெண்களைப் பற்றியும், அவனது காதல் பற்றியும் கலக்கலான காமெடி கலந்து சொல்கிறது இப்படம். ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கிறது.

உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய C.S. கார்த்திகேயன் இப்படத்தை இயக்கியுள்ளார். Clear Water Films Inc. சார்பில் அரவிந்த் ஜெயபாலன் i cinema சார்பில் ஐயப்பன் ஞானவேல் & Captain Mega Entertainment சார்பில் கேப்டன் மேகவாணன் இசைவாணன் இணைந்து தயாரித்துள்ளனர்.

மூன்று காலகட்டத்தில் விதவிதமான தோற்றங்களில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி & மேகா ஆகாஷ் நாயகிகளாக நடித்துள்ளனர். அருண் குமார் ஜெய்சீலன், ஶ்ரீராம் நண்பர்களாக முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் குடும்பத்துடன் சிரித்து மகிழ மிகச்சரியான பொழுதுபோக்கு திரைப்படம் எனும் வகையில், பாராட்டுக்களை பெற்று வருவதோடு, பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

 

More News

அவர் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லை, நானே போயிருவேன்: விஜய் அரசியல் கட்சி குறித்து இயக்குனர்..!

விஜய் அழைத்தால் அவருடைய கட்சியில் இணைவீர்களா என்று பிரபல இயக்குனரிடம் செய்தியாளர்களுக்கு கேட்டபோது 'நல்ல விஷயத்துக்கு அவர் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை, நானே போயிடுவேன்' என்று பதில் அளித்துள்ளார்.

விஜய்யின் 'தளபதி 69'  இயக்குனர் பட்டியலில் இணைந்த இன்னொரு இயக்குனர்.. மீண்டும் ஒரு 'வாரிசு' திரைப்படமா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி படம் என்று கூறப்படும் 'தளபதி 69' படத்தின் செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற

'எஸ்கே 23' படத்தின் முதல் நாளே பிரச்சனை? அவுட்டோர் யூனிட் அறிவித்த அதிர்ச்சி அறிவிப்பு

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'எஸ்கே 23' படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் இந்த படத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம்

கௌதம் மேனனின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! புரமோஷன் பணிகள் தொடக்கம்..!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அவரது இயக்கத்தில் உருவான இன்னொரு

35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்.. நெகிழ்ச்சியான சம்பவத்தை கூறிய நடிகை குஷ்பு!

 நடிகை குஷ்பு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் திரைப்படத்தில் நடித்த நிலையில் மீண்டும் பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டதாக நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.