பேரவை வளாகத்தில் ஆம்புலன்ஸ். காயம் அடைந்தது யார்?

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

இன்று காலை சட்டமன்றம் கூடியதில் இருந்தே அமளிதுமளி ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் இருக்கை உள்பட பல இருக்கைகள் சேதமடைந்துள்ளதால் சட்டமன்றமே களேபரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சற்றுமுன்னர் சட்டசபை வளாகத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அந்த ஆம்புலன்ஸில் சட்டசபை ஊழியர் ஒருவரை ஆம்புலன்ஸ் ஊழியர் கொண்டு சென்றனர்.
சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சனையின்போது பாலாஜி என்ற பணியாளர் மயக்கம் அடைந்ததாகவும், அவர்தான் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

தலைமைச் செயலக சாலைகள் மூடல். அதிரடிப்படை குவிப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக இன்று கூடிய சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டதால் சபை 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

சபாநாயகர் மைக், பேரவை செயலாளர் இருக்கை உடைப்பு. என்ன நடக்கின்றது சட்டமன்றத்தில்?

இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்த நிலையில் சபையில் கடும் அமளி ஏற்பட்டு வருகிறது.

மேஜை மீது ஏறி சபாநாயகரிடம் வாக்குவாதம் செய்த பெண் எம்.எல்.ஏ

ரகசிய வாக்கெடுப்பு அல்லது வேறொரு நாளில் வாக்கெடுப்பு என்ற கோரிக்கையை ஓபிஎஸ் அணி, திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் மறுப்பு. பேரவையில் கடும் அமளி

அதிமுகவின் ஓபிஎஸ் அணி, திமுக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு கோரிய நிலையில் இவர்களுடைய கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.

மக்களை சந்திக்க எம்.எல்.ஏக்களை அனுமதிக்க வேண்டும். நட்ராஜ் எம்.எல்.ஏ

தமிழக சட்டமன்றத்தில் சற்று முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்மொழிந்த நிலையில் ஓபிஎஸ் அணி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் வேறு ஒருநாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.