அதிர்ச்சி மேல் அதிர்ச்சி: 'அசுரன்' பட நடிகரும் கொரோனாவுக்கு பலி!

  • IndiaGlitz, [Monday,May 17 2021]

தமிழ் திரையுலகை சேர்ந்த ஒருசிலர் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருவது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. இன்று அதிகாலை கூட பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா கொரோனாவுக்கு பலியானார் என்ற செய்தியில் இருந்து திரையுலகினர் இன்னும் மீண்டு வரவில்லை. மேலும் அருண்ராஜா காமராஜ் சகோதரருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ’அசுரன்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ சுசீந்திரன் இயக்கிய ’வெண்ணிலா கபடி குழு’ உட்பட பல படங்களில் நடித்தவரும், சமீபத்தில் வெளியான ’அசுரன்’ திரைப்படத்தில் சூப்பர் கேரக்டர் ஒன்றில் நடித்தவர் நடிகர் நிதிஷ் வீரா என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் நடிகர் நிதிஷ்வீரா கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா என்ற கொடிய அரக்கனுக்கு அடுத்தடுத்து திரையுலக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டும் பலியாகியும் வருவது திரையுலகிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது.

More News

அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனாவால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

கொரோனா வைரஸ் காரணமாக பல திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். கொரோனாவால் திரையுலக பிரபலங்களின் உயிரிழப்புகள் பெரும்

வைரமுத்துவின் "நாம் நடந்த தெருவில்" காதல் பாடல் வெளியானது...! கமெண்டுகளை குவிக்கும் காதல்வாசிகள்....!

கவிஞர் வைரமுத்து அவர்கள் "நாட்படு தேறல்" என்ற தலைப்பின் கீழ் தனது 5-வது பாடலை வெளியிட்டுள்ளார்.

முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்...! மோடிக்கு சவால் விட்ட அரசியல் தலைவர்......!

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டிய&#

பிகினி உடையுடன் சைக்கிள் ஓட்டும் 'பிகில்' பட நடிகரின் மகள்: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தில் நடித்த நடிகரின் மகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் சைக்கில் ஓட்டும் வீடியோ பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

7 மாத குழந்தை முதல் 99 வயது முதியவர் வரை: கொரோனா நேரத்தில் சமந்தாவின் ஊக்கமளிக்கும் மெசேஜ்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கொரோனா என்றாலே அனைவருக்கும் நடுநடுங்க வைக்கும் அளவுக்கு பயம்