'அசுரன்' பட நடிகைக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

  • IndiaGlitz, [Monday,May 03 2021]

தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளார்

தனுஷ் நடித்த ’அசுரன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அம்மு அபிராமி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்த நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையை அடுத்து பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் என்னை நானே தனிமை படுத்துக்கொண்டேன். மருத்துவரின் பரிந்துரையின்படி மருந்துகளை எடுத்து வருகிறேன். முன்பை விட வலிமையாக மீண்டும் குணமாகி திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், அதிக கவனமாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்

இதனையடுத்து அம்மு அபிராமி விரைவில் குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

கலைஞரை போல் கலைத்துறையில் கவனம் செலுத்துங்கள்: ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர் தாணு வாழ்த்து!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று இன்னும் ஒரு சில நாட்களில் பதவி ஏற்க உள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்து உள்ளது

தேர்தல் துளிகள்: 3 மே 2021

திமுக கட்சியுடன் பல ஆண்டுகாலமாக கூட்டணி வைத்து இருக்கும் விடுதலை

இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பா? வெளியான தகவல்!

கொல்கத்தா அணியின் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் சர்மா ஆகியோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளதாகவும்

முதல்வர் பதவியேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு நடிகர் கார்த்தி வைத்த கோரிக்கை!

வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் தாருங்கள் என முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்

வெற்றிக் களிப்பில் வங்கத்துச் சிங்கம் மம்தா பானர்ஜி… மேற்கு வங்கத் தேர்தல்!

மேற்கு வங்கச் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.