'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்

தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின், தனது சமூக வலைத்தளத்தில், ‘அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்! என்று கூறியிருந்தார்.

டாக்டர் ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக முக ஸ்டாலின் கூறியபோது, ‘மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை! நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று சவால் விட்டிருந்தார்

இந்த சவாலுக்கு தற்போது டாக்டர் ராம்தாஸ் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது: முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?

முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது? நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை!

அசுரன் படத்தில் ஆரம்பித்த இருவரின் வார்த்தைப்போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே உள்ள நிலையில் இந்த பிரச்சனை எப்போதுதான் முடிவுக்கு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'பிகில்' இயக்குனர் அட்லீ குறித்து பரவி வரும் வதந்தி!

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் அனைவரும்

கவின் - லாஸ்லியா காதல் விவகாரம்: வருத்தம் தெரிவித்த சேரன்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா காதலித்ததும், அந்த காதலுக்கு லாஸ்லியா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிந்ததே. இந்த நிலையில் கவின், லாஸ்லியா ஆகிய இருவருக்கும்

டெங்கு காய்ச்சலுக்கு பலியான குழந்தை நட்சத்திரம்: அதிர்ச்சியில் திரையுலகம்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

விபத்தில் சிக்கிய விஜய்சேதுபதி பட நாயகியின் தத்துவ மழை!

கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் அறிமுகமாகி அதன் பின் 'தேவராட்டம்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.

விஜய் படப்பிடிப்பில் அஜித் எண்ட்ரி ஆனதும் நடந்த அதிசயம்

விஜய் நடித்த 'பிகில்' படத்தில் விஜய்க்கு நண்பர்களாக நடித்த ஜிமிக்கி, மணலி பிரபு, எஸ்தர் பிரபு ஆகியோர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து