அவர்களது ஆசையை நிறைவேற்ற முடியவில்லை.. மன்னிப்பு கேட்ட அஸ்வத் மாரிமுத்து..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தனது பெற்றோர் ஆசையை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்றும், அதனால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக, தனது பெற்றோருடன் எடுத்த புகைப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"ஓ மை கடவுளே" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் நடித்த "டிராகன்" என்ற படத்தை இயக்கினார். இந்த படம் சமீபத்தில் வெளியானதில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும், அடுத்ததாக சிம்பு நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருக்கிறார். அதற்குப் பிறகு, மீண்டும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அஸ்வத் மாரிமுத்து தனது பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், "என் பெற்றோரை சந்தித்தேன். மாரிமுத்து என்கிற தனபால்! மேலும், அவர் எங்கே போனாலும் போட்டுட்டு போற ஜோல்னா பை. சித்ரா – எனது அம்மா! ‘டிராகன்’ படம் வெளியானவுடன், நான் என் அப்பா, அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் பிளஸ்-2 முடித்தவுடன், அவர்கள் என்னை டாக்டராக பார்க்க விரும்பினார்கள். ஆனால், நான் டாக்டருக்கு படிக்காமல், அடங்காத இன்ஜினியரிங் மாணவராக இருந்தேன். அதற்காகத்தான் இந்த மன்னிப்பு!"
இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Meet my parents ,
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) February 23, 2025
Marimuthu engira dhanapal and enga ponalum avar potutu pora jolna Pai 😂
Chitra as Chitra ♥️
Dragon was more like a sorry to them for not becoming a doctor which they wanted after 12th and becoming a atrocious eng student which I later realised was nothing cool… pic.twitter.com/NFKjy4lkVt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments