'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு போக மாட்டேன்: அஸ்வின் பட நாயகி!


Send us your feedback to audioarticles@vaarta.com


குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் அஸ்வினுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அழைத்தால் போக மாட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 3 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், ரசிகர்கள் ஒவ்வொரு எபிசோடையும் ரசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனில் ஸ்ருதிகா, வித்யூலேகா ராமன், சந்தோஷ் பிரதாப், தர்ஷன், கிரேஸ் கருணாஸ், அந்தோணி தாஸ், அம்மு அபிராமி, ரோஷினி, உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் விரைவில் வைல்ட்கார்ட் எண்ட்ரி வர இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அஸ்வின் நடித்த ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த தேஜூ அஸ்வினி வரவிருப்பதாக கூறப்படுகிறது.
இது பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பிய நிலையில், ‘சத்தியமாக நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போக மாட்டேன், ஏனென்றால் எனக்கு சமைக்க தெரியாது என்று தேஜு அஸ்வின் கூறியுள்ளார். அப்படியானால் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆகும் போட்டியாளர் யாராக இருக்கும் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments