close
Choose your channels

கொரோனா வைரஸால் அவன் செத்துவிடுவான்: நடிகை கஸ்தூரி சாபம்

Friday, March 20, 2020 • தமிழ் Comments

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு குற்றவாளிகளில் நான்கு பேர் சற்றுமுன் தூக்கிலிடப்பட்டனர். இதனை நாடே கொண்டாடி வருகிறது. நிர்பயாவின் ஆன்மா இன்று தான் சாந்தியடையும் என்று நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக கருத்துக்களை அவ்வப்போது ஆவேசமாக தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘நிர்பயா வழக்கில் கடைசியாக ஒருவழியாக மனித மிருகங்கள் நால்வருக்கு தண்டனை கிடைத்துவிட்டது.

ஆனால் ஒருவர் மட்டும் சட்டத்தின் ஓட்டைகள் மூலம் தப்பித்துவிட்டார். அவரும் கொரோனா வைரஸ் அல்லது பேருந்து விபத்து சிக்கி உயிரிழப்பார் என்று நம்புகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க ஏழு வருடங்கள் என்பது நீண்ட காலம் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு விரைவில் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கஸ்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்பதும், இன்னொரு குற்றவாளி மைனர் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தண்டனை பெற்று விடுதலையாகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz