close
Choose your channels

ஆயுதபூஜை ரிலீஸ் பட்டியலில் இணைந்த மேலும் ஒரு படம்!

Thursday, September 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் தான் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது என்பதும், 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தற்போது அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அடுத்தடுத்து புதிய திரைப்படங்கள் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வரும் அக்டோபர் 14ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் விஷால் நடித்த ‘எனிமி’ மற்றும் ஆர்யா நடித்த ‘அரண்மனை 3’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

இந்த நிலையில் அதர்வா நடித்து ரிலீசுக்கு தயாராகி பல மாதங்களான திரைப்படம் ’தள்ளி போகாதே’. இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்ஷன் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆயுதபூஜை ரிலீஸ் பட்டியலில் அதர்வாவின் படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இந்த படத்தில் ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஜெகன், வித்யூலேகா ராமன் உள்பட பலர் நடித்துள்ளனர். கோபி சுந்தரின் இசையில், சண்முகசுந்தரம் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ள உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.