close
Choose your channels

காதலியை அறிமுகம் செய்த கே.எல்.ராகுல்… வைரலாகும் பதிவு!

Saturday, November 6, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ் மேனாகவும் இருந்துவரும் கே.எல்.ராகுலும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரம் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கே.எல்.ராகுல் தற்போது, அதியாவுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சுனில் ஷெட்டி. இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான “தர்பார்“ படத்தின் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். அவருடைய மகள் அதியா ஷெட்டி பாலிவுட் சினிமாக்களில் நடித்து வருகிறார். மேலும் இன்று அதியாவின் பிறந்தநாள்.

இதையடுத்து அதியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொன்ன கே.எல்.ராகுல் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டதோடு ஹேப்பி பர்த்டே மை லவ் என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து காதல் ஜோடிகளான கே.எல்.ராகுல்- அதியா ஷெட்டிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.