அட்லி கதையை கேட்டு மிரண்டு போனேன்.. ஹாலிவுட் கலைஞர் ஆச்சரியம்.. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. சற்றுமுன் அந்த அறிவிப்பு வெளியாகி, இதுகுறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது.
வீடியோவின் ஆரம்பத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனை அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் சந்தித்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார்கள். அங்கு VFX நிறுவனங்களிடம் கதையை கூறி, எந்த மாதிரியான காட்சிகள் வேண்டும் என்று அட்லி கூறும் காட்சிகளும், அதற்கு ஹாலிவுட் கலைஞர்கள் VFX குறித்து விளக்கம் வழங்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதன்பின்னர் சில காட்சிகள் படமாக்கப்படும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.
மேலும், ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் அட்லியின் கதையை கேட்ட பிறகு, “எனக்கு இன்னும் தலையைச் சுற்றுகிறது. இப்படி ஒரு கதையை நான் கேட்டதே இல்லை!” என மிரண்டு கூறும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, "அட்லி என்ன கதை சொல்லி இருப்பார்?" என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மொத்தத்தில், இந்த இரண்டு நிமிட வீடியோ தமிழில் இதுவரை வெளிவராத ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக இருக்கும் என்றும், தமிழில் இதுவரை இல்லாத மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லி இதுவரை இயக்கிய அனைத்து படங்களையும் வெற்றிப் படங்களாக மாற்றிய நிலையில், இந்த படம் அவருடைய திரையுலக வாழ்க்கையின் உச்சத்திற்கு அவரை கொண்டு செல்லும் எனக் கூறப்படுகிறது.
Gear up for the Landmark Cinematic Event⚡✨#AA22xA6 - A Magnum Opus from Sun Pictures💥@alluarjun @Atlee_dir #SunPictures #AA22 #A6 pic.twitter.com/MUD2hVXYDP
— Sun Pictures (@sunpictures) April 8, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments