close
Choose your channels

அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் 2 நாயகிகள்.. ஒருவர் பாலிவுட் இன்னொருவர் கோலிவுட்..!

Saturday, April 12, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும், இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, அடுத்த கட்டமாக அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிக்கும் நடிகைகள் உள்ளிட்ட நட்சத்திர தேர்வுகள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதால், இரண்டு நாயகிகள் தேவைப்படும் நிலையில் ஒருவர் பாலிவுட்டில் இருந்தும், இன்னொருவர் கோலிவுட்டில் இருந்தும் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக ஜூனியர் என்டிஆர் உடன் ‘தேவாரா’ படத்தில் நடித்தவர், தற்போது ராம்சரண் நடித்து வரும் ‘பெத்தி ’ என்ற படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். எனவே, இவர்தான் இந்தப் படத்தின் முதல் நாயகியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல், இன்னொரு நாயகியாக அட்லீக்கு மிகவும் நெருக்கமான தோழியாக உள்ள சமந்தா நடிப்பார் என்றும், இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் ஏற்கனவே ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியிருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரது படத்தில் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment