ஷாருக்கானை சந்தித்த அட்லி! புதிய அறிவிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Sunday,November 03 2019]

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி ஷாருக்கானின் கோடிக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியதால் நேற்று ஷாருக்கான் குறித்த டிரெண்டுக்கள் சமூக வலைத்தளங்களில் பட்டைய கிளப்பின.

இந்த நிலையில் நேற்று மாலை நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கான் சில முக்கிய விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவில் இயக்குனர் அட்லி தனது மனைவி ப்ரியாவுடன் கலந்து கொண்டார்.

ஷாருக்கானின் அடுத்த படத்தை அட்லி இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் அட்லிக்கு ஷாருக்கான் அழைப்பு விடுத்திருப்பது, ஷாருக்கான் - அட்லி இணையவுள்ளதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் ஷாருக்கான் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கான் படம் குறித்த அறிவிப்பு வெளியான பின்னர்தான் அந்த படம் ‘மெர்சல்’ ரீமேக்கா? அல்லது புதிய கதையம்சம் கொண்ட படமா? என்பது தெரியவரும்.