அட்லி-கீர்த்தி சுரேஷ் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா? புதிய ரிலீஸ் தேதி என்ன?

  • IndiaGlitz, [Sunday,April 14 2024]

அட்லி தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 31 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான ’தெறி’ என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பதை தெரிந்தது.

இந்த படத்தின் பூஜையில் அட்லி, பிரியா அட்லி, கீர்த்தி சுரேஷ், வருண் தவான் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘தெறி’ ஹிந்தி ரீமேக்கில் விஜய் கேரக்டரில் வருண் தவான், சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், எமி ஜாக்சன் கேரக்டரில் வாமிகா நடித்து வருகின்றனர் என்றும் இந்த படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆவதன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் அனேகமாக ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் விரைவில் சரியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

அல்போன்சாவுக்கு பங்கனப்பள்ளி மாம்பழம் கொடுத்த கமல்ஹாசன்.. சித்தார்த் அடித்த கமெண்ட்..!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் அல்போன்சா என்பவரை உலகநாயகன் கமல்ஹாசன் சந்தித்தபோது அவருக்கு மாம்பழம் பரிசளித்ததாகவும் அப்போது அருகில் இருந்த நடிகர் சித்தார்த்,

'இந்தியன் 2' படத்தின் புதிய போஸ்டர்.. கமல் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு விருந்து..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் கமல் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு விருந்தாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

தண்ணீருக்குள் பிரசவம் என்பது சாத்தியமா?

வழக்கமாக நடக்கும் பிரசவத்தை காட்டிலும் நீர் பிரசவம் தாய்க்கும் சேய்க்கும் ஒரு வசதியான நிலை மற்றும் பக்குவத்தை தருகின்றன.இது தற்போது அனைத்து பெற்றோர்களாலும் தேர்வு செய்யப்படும் முறை ஆகும்...

'கோட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளின் புரமோ வீடியோ.. பாடகர் குறித்த மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடித்து வரும்  'கோட்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக இருப்பதாக சில மணி நேரங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில்

ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ் குறித்த சர்ச்சை கருத்து.. பிரபல நடிகருக்கு குவியும் கண்டனங்கள்..!

பிரபல நடிகர் ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில் அவருக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.