close
Choose your channels

மனைவி பிரியாவுடன் 'அரபிக்குத்து' பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் அட்லி!

Monday, February 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த பாடல் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட அனைத்து தமிழ் திரையுலக பிரபல நடிகைகளும் சின்னத்திரை நடிகைகளும், விளையாட்டு பிரமுகர்களும், ஏராளமான ரசிகர்களும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில், அந்த வீடியோக்களும் வைரல் ஆகி வருகின்றன

இந்த நிலையில் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, தனது மனைவி பிரியாவுடன் சேர்ந்து ‘அரபிக்குத்து’ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோ பிரியா அட்லியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் லட்சக்கணக்கில் கைகளை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்கவிருப்பதாகவும், இந்த படம் குறித்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos