அட்லி-ஷாருக்கானின் 'ஜவான்' டீசர்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

பிரபல இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அட்டகாசமாக வெளியாகியுள்ள இந்த டீசரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கான் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட என ஐந்து மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் டைட்டில் ஏற்கனவே வெளியான தகவலின்படி ’ஜவான்’ என்று வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த டீசரில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் பிரியாமணி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும், யோகி பாபு உள்பட பல தமிழ் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

More News

சத்ரபதி சிவாஜி கேரக்டருக்கு இந்த நடிகர் தான் பொருத்தமாக இருப்பார்: ரசிகர்கள் கணிப்பு

மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி கேரக்டருக்கு இந்த நடிகர் தான் பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் கணித்து அதுகுறித்த கற்பனையான புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில்

'கைதி 2' ஆரம்பிக்கலாங்களா? லோகேஷிடம் தயாரிப்பாளர் கேள்வி!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'விக்ரம்' திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

'விக்ரம்' படம் பார்க்கும் முன் இதனை செய்யுங்கள்: ரசிகர்களுக்கு லோகேஷ் வேண்டுகோள்!

 உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்'  திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

சென்னை மாயாஜாலில் மட்டும் 'விக்ரம்' எத்தனை காட்சிகள் தெரியுமா?

சென்னை மாயாஜால் திரையரங்க வளாகத்தில் 'விக்ரம்' படம் இன்று எத்தனை காட்சிகள் திரையிடப்படுகிறது என்று வெளியான தகவல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனக்குத் தானே திருமணம்… இந்திய இளைஞர்களை அலறவைக்கும் தகவல்!

குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் திருமணம் தற்போது இந்தியா முழுக்கவே பேசுபொருளாகி இருக்கிறது. காரணம்