close
Choose your channels

அட்லி-ஷாருக்கன் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thursday, August 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ள திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அட்லி என்பது தெரிந்ததே. இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஷாருக்கான் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பில் 180 நாட்கள் துபாயில் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாக செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் டீசர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.