close
Choose your channels

'மணி ஹெய்ஸ்ட்' ரீமேக்கா அட்லி-ஷாருக்கான் படம்?

Saturday, September 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், மற்றும் பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் அதிரடி ஆக்சன் படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனே நகரில் ஆரம்பமான நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படம் ஒரு வங்கியை ஹீரோ கொள்ளை அடிக்கும் கதையம்சம் கொண்டது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வலம் வருகிறது. ஏற்கனவே இதுபோன்ற கதை ஒன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ’மணி ஹெய்ஸ்ட்’ என்ற டைட்டிலில் வெளிவந்த நிலையில் அந்த கதையின் இந்திய உரிமையை ஷாருக்கான் வாங்கி உள்ளதாகவும் அந்தக் கதையைத்தான் அட்லி தனது பாணியில் டெவலப் செய்து ’லயன்’ என்ற திரைப்படமாக இயக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா மற்றும் பிரியாமணி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.