'விஜய் 59' டைட்டில் - ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி. அட்லி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,November 23 2015]

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், எமி ஜாக்சன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் கடந்த தீபாவளி அன்றே வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியது. ஆனால் ஒருசில காரணங்களால் டைட்டில் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லும் மற்றும் டைட்டில் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் இயக்குனர் அட்லி, தனது சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அட்லியின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் #Vijay59FLFromNov26 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை இந்திய அளவில் டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், சத்யராஜ், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

More News

மலேசியாவில் தமிழ் நடிகர் திடீர் மரணம்

அறிமுக இயக்குனர் விஜய் இயக்கி வரும் 'க க க போ' என்ற படத்தில் அறிமுகமாகும் புதுமுக நடிகர் கேசவன் மலேசியாவில்...

'விஜய் 59' படத்தில் தேசியவிருது பெற்ற பாடகி

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது ஏற்கனவே பார்த்தோம்....

தனுஷுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட த்ரிஷா

பிரபுசாலமன் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு அதிரடி ஆக்சன் படத்திலும், வேல்ராஜ் இயக்கத்தில் 'தங்கமகன்' படத்திலும் நடித்து முடித்துவிட்ட நடிகர் தனுஷ்...

விஷாலின் 'மருது' படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

பாண்டியராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த 'கதகளி' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....

நயன்தாராவின் அடுத்த ஹீரோ விக்ரம்?

விஜய் நடித்த 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன், விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளதாக ஏற்கனவே பார்த்தோம்...