கொரோனா தடுப்பு நிதியாக அட்லி கொடுத்த தொகை

  • IndiaGlitz, [Friday,April 10 2020]

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா தொழிலாளர்கள் வேலை இன்றி வருமானமின்றி வறுமையில் வாடி வருகின்றனர். இதனை அடுத்து பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி வேண்டுகோளை அடுத்து சினிமா தொழிலாளர்களுக்கு உதவிகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்களுக்கும், மற்ற நிறைந்த திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பல பிரபலங்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. சமீபத்தில்கூட அஜித் ரூ.1.25 கோடியும், ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடியும் நிதி உதவி செய்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய் நடித்த ’தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அட்லி தனது பங்காக ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். இதில் 5 லட்சம் பெப்சி அமைப்பில் உள்ள தொழிலாளர்களுக்கும் 5 லட்சம் இயக்குனர் சங்கத்திற்கும் அட்லி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து மேலும் பல பிரமுகர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்காக உதவி செய்ய முன் வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டைட்டிலை ரிலீஸ் செய்ய ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிரபல நடிகர்

கோலிவுட் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய திரைப்படங்கள்

ஊரடங்கு உத்தரவால் தவித்த மகனை 1400 கிமீ ஸ்கூட்டியில் அழைத்து வந்த வீரத்தாய்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 1400 கிலோ மீட்டருக்கு

ரஜினி படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி: நெட்டிசன்களின் ஆச்சரிய கண்டுபிடிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தை இயக்கினர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது

மனைவி பலாத்காரம் செய்யப்பட்டது கூட தெரியாமல் குறட்டை விட்டு தூங்கிய காவலாளி

சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக நேபாளி ஒருவர் பணி செய்து கொண்டு வருகிறார். அவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவியுடன்

வீட்டில் இருங்கள், உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்: பிரபல குணச்சித்திர நடிகர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமூக விலகலை பலர் கடைபிடிக்காததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.