close
Choose your channels

ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது அட்லியின் அடுத்த படம்! பரபரப்பு தகவல்

Monday, June 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், மற்றும் பிகில் ஆகிய ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் அட்லி. இவர் தனது அடுத்தப் படத்தை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் அட்லி தயாரிப்பில் உருவான ’அந்தகாரம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளது

இந்த நிலையில் சமீபத்தில் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனதையடுத்து ’அந்தகாரம்’ திரைப்படமும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ’நெட்பிளிக்ஸில்’ விளம்பரம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘பொன்மகள் வந்தாள் திரைப்படம் போலவே இந்த படமும் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் பூஜா ராமச்சந்திரன், குமார் நடராஜன், மீஷா கோஷல், ஜீவா ரவி,உள்பட பலர் நடித்துள்ளனர். பிரதீப் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.