close
Choose your channels

'மசாலா சினிமாவின் மேஜிக்மேன்' அட்லி: பிரபல இயக்குனர் பாராட்டு

Friday, May 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து அதன் பின்னர் ’ராஜா ராணி’ என்ற திரைபடத்தின் மூலம் இயக்குனரானவர் இயக்குனர் அட்லி. அதனை அடுத்து தொடர்ச்சியாக தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ என மூன்று சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் என்பதால் இவர் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் ’பிகில்’ திரைப்படம் ரூபாய் 20 கோடி நஷ்டம் என்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பிய நிலையில் இந்த வதந்திக்கு நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தார். இதனை அடுத்து தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ’அட்லியின் திரைப்படங்களை நான் மிகவும் விரும்பிப் பார்ப்பேன் என்றும் குறிப்பாக ’பிகில்’ திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படம் என்றும் கூறியுள்ளார். மேலும் இயக்குனர் அட்லி, ‘மசாலா சினிமாவின் மேஜிக் மேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கரண் ஜோகரின் இந்த பாராட்டுக்கு இயக்குனர் அட்லி தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கரண் ஜோகர் அதே பதிவில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ’அசுரன்’ திரைப்படம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ‘அசுரன்’ திரைப்படத்தை பார்த்ததாகவும் இப்படி ஒரு திரைப்படத்தை தன் வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை என்றும் மிகவும் அற்புதமான படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பு மிகவும் ஆச்சரியமாக இருந்ததாகவும் நான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்றும் இந்த படத்தின் பல காட்சிகள் தன்னை சீட்டின் நுனிக்கே கொண்டு சென்றததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு சூப்பர்ஹிட் தமிழ் வெற்றிப் படங்கள் குறித்து கரண் ஜோகர் பதிவு செய்துள்ள இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

View this post on Instagram

Thank you sir @karanjohar lots of love

A post shared by Atlee (@atlee47) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.