close
Choose your channels

மீண்டும் 'தெறி' படத்தில் இணைந்த அட்லி.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

Sunday, July 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கிய நிலையில் இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மீண்டும் ‘தெறி’ படத்தில் அட்லி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் சூப்பர் ஹிட்டான ‘தெறி’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் கேரக்டரில் வருண் தவான் நடிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தை காலிஸ் என்பவர் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ’கீ’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு மே 31ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை இயக்குனர் அட்லி தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் சூப்பர் ஹிட் ஆன ‘தெறி’ படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.