தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த அட்லி பட ஹீரோ.. மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,March 15 2023]

தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் ஏற்கனவே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்ட சில பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது அட்லி படத்தின் ஹீரோ ஒருவரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார் என்பதும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தற்போது வினோத் கிஷான் என்ற நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அட்லீ தயாரிப்பில் உருவான ’அந்தகாரம்’ என்ற திரைப்படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சர்ச்சை நாயகி உர்ஃபியின் புது அவதாரம்… மேலாடையின்றி மறைத்த வைரல் புகைப்படம்!

பேஷன் என்ற பெயரில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டுவரும் நடிகை உர்ஃபி ஜாவேத் தற்போது புது போட்டோ ஷுட்

போராடுவோம் போராடுவோம்: ஸ்ருஷ்டிக்கு எதிராக ஒன்று சேர்ந்த கோமாளிகளால் பரபரப்பு..!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளி புகழை திட்டிவிட்டதால் அனைத்து கோமாளிகளும் ஒன்றிணைந்து 'போராடுவோம் போராடுவோம்' என போராட்டம் செய்து வெளிநாட்டுப்பு செய்வதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி

'லியோ' படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை? அஜித் படத்திலும் நடிக்க மறுத்ததாக தகவல்..!

 தமிழ் திரை உலகில் உள்ள நடிகைகளுக்கு விஜய், அஜித் ஆகியவர்களுடன் நடிக்க வேண்டும் என்ற வாழ்நாள் கனவு இருந்து வரும் நிலையில் விஜய், அஜித் ஆகிய இருவருடனும் நடிக்க வந்த வாய்ப்பை அவர் மறுத்ததாக

23 வயது கிரிக்கெட் வீரர் மீது கிரஷ்? ராஷ்மிகா மந்தனா அளித்த பதில்..!

 இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுப்மன் கில் மீது கிரஷ்ஷா? என்ற கேள்விக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'கண்ணை நம்பாதே முதல் 'வாத்தி' வரை: இந்த வார திரையரங்குகள் மற்றும் ஓடிடி ரிலீஸ்: ஒரு பார்வை

ஒவ்வொரு வாரமும் குறைந்தது மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் திரையரங்கிலும் ஓடிடியிலும் வெளியாகி சினிமா ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செட்ய்து வரும் நிலையில் இந்த வாரம் திரையரங்கில் உதயநிதி