close
Choose your channels

அட்லியின் அடுத்த படத்தின் தயாரிப்பு நிறுவனம்.. ஹீரோ யார்?

Saturday, January 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் அட்லி, முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆர்யா, நயன்தாரா நடித்த ‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி, அதன்பின் விஜய் நடிப்பில் உருவான ’தெறி’’ ‘மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இதனை அடுத்து தற்போது அவர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ’ஜவான்’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் அட்லி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

விஜய் நடிக்கும் ’தளபதி 68’ படத்தை அட்லி இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி நேற்று திடீரென சமூக வலதங்களில் அஜித்தின் 63வது படத்தை அட்லி இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அட்லியின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இதுவரை இல்லாத அளவில் தமிழ் திரை உலகின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நாயகனாக அஜித் அல்லது விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் யாராக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் அட்லியின் இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.