அட்லியின் அடுத்த பட ஹீரோ இவரா? அப்ப விஜய்-ஷாருக்கான் படம் என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Saturday,December 23 2023]

அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தின் ஹீரோ குறித்த தகவல் கசிந்துள்ள நிலையில் விஜய் மற்றும் ஷாருக்கான் படம் என்னாச்சு? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி, அதன் பின்னர் ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் விஜய் படங்களை இயக்கினார். இதனை அடுத்து சமீபத்தில் அவர் இயக்கிய ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரையும் இணைத்து இயக்க வேண்டும் என்று அட்லி விருப்பப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி அட்லியின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பை முடிந்த பின்னர் அல்லு அர்ஜுன், அட்லி இயக்கும் படத்தில் இணைவார் என்றும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

த்ரிஷாவுக்கு எதிரான மானநஷ்ட வழக்கு.. மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!

நடிகை த்ரிஷா உள்பட 3 பேருக்கு எதிராக மன்சூர் அலிகான் ஒரு கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு பதிவு செய்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

'வேட்டையன்' படப்பிடிப்பு முடிவது எப்போது? 'தலைவர் 171' படப்பிடிப்பு எப்போது ஆரம்பம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி

எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. இந்த வார எவிக்சன் இவரா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகள் அடிப்படையில் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பது தெரிந்ததே.  

அடுத்தடுத்த நாட்களில் 2 தனுஷ் படங்களின் அப்டேட்டுக்கள்: ரசிகர்கள் குஷி..!

தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அவரே தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார் என்பதை பார்த்தோம்.

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியான ரம்யா பாண்டியன்.. 12 வயது குழந்தைக்கு அம்மாவா?

பிக் பாஸ் தமிழ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் டப்பிங் பணியில் அவர் ஈடுபட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.