ஆஸ்கார் விருதுக்கு செல்கிறதா 'ஜவான்'.. அட்லி கூறியது என்ன?

  • IndiaGlitz, [Tuesday,September 19 2023]

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’ஜவான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது

இந்த படம் முதல் நாளே ரூ.129 கோடி வசூல் செய்த நிலையில் 11 நாட்களில் 858 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் 1000 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பு பெற்ற இந்த படம் ஆஸ்காருக்கு செல்ல இருப்பதாக அட்லி தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது ’திரைத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஆஸ்கார், தேசிய விருதுகள், கோல்டன் குளோப் விருதுகள் மீது ஆசை இருக்கும். அந்த வகையில் ‘ஜவான்’ திரைப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்ப நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

இந்த பேட்டியை ஷாருக்கான் அவர்கள் படித்தால் அவரிடம் கண்டிப்பாக ஆஸ்காருக்கு இந்த படத்தை எடுத்துச் செல்ல முயற்சி செய்யுங்கள் என்று கூறுவேன் என்று தெரிவித்தார். ’ஜவான்’ திரைப்படம் ஆஸ்கார் செல்லுமா? அப்படியே சென்றாலும் விருதை வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விஜய் ஆண்டனியின் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் லாரா, திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியை அடுத்து ரிஷிகேஷ் சென்ற ரம்யா பாண்டியன்... வைரல் புகைப்படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமயமலை மற்றும் ரிஷிகேஷ் சென்று திரும்பிய நிலையில், தற்போது அதே பகுதிக்கு நடிகை ரம்யா பாண்டியன் சென்றுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல்

அனிருத்- கீர்த்தி திருமணமா? கீர்த்தி தந்தை அளித்த விளக்கம்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் மீது சில வதந்திகள் அவ்வப்போது கிளம்பி வரும் நிலையில் தற்போது அனிருத்தை அவர் திருமணம் செய்யப் போவதாக  பரபரப்பு வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து

நீச்சல் குளத்தில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா.. செம்ம வைரலாகும் வீடியோ..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் ரூ.15 கோடி செலவு.. ஹாலிவுட்டுக்கு இணையாக உருவாகியுள்ள 'லியோ'!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் குறித்த ஆச்சரியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஹாலிவுட் படத்திற்கு இணையாக ஒரு காட்சி இந்த