அட்லியுடன் இணையும் சந்தானம்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,January 20 2020]

’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. விஜய்யின் அடுத்த படத்தையும் அட்லி இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் வரும் 31ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ’டகால்டி’. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை இயக்குனர் அட்லி தனது சமூக வலைத்தளத்தில் நாளை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சந்தானத்தின் பிறந்தநாள் என்பதால் இந்த அறிவிப்பு ஆச்சரியமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்படி என்ன ஆச்சரிய அறிவிப்பு வரப்போகிறது என்பதை நாளை காலை 11 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

முதல்முறையாக சந்தானம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தீபக்குமார் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

ஜார்கண்டில் பாஜக வேட்பாளராக நிற்க மறுத்ததால், விளையாட்டில் ஒதுக்கப்படுகிறாரா தோனி..?!

பிசிசிஐ ஜனவரி 16 வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலிலும் தோனி பெயர் இடம்பெறவில்லை. இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வெற்றிப்பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த சந்தானம்!

நடிகர் சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வெற்றிப்படம் 'ஏ1'. இந்த படம் ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 20 கோடி ரூபாய் வசூலித்ததாக

ரஜினி மகளின் 2வது திருமணம் பெரியாரின் சீர்திருத்தமா? ஹெச்.ராஜா பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து திமுக எம்எல்ஏ அன்பழகன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியபோது

பொதுத் தேர்வில் நேர்மையாக வெற்றி பெறுவது எப்படி? மாணவர்களுக்கு மோடி வழங்கிய அறிவுரைகள்.

2 ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பா.ஜ.க. வின் புதிய தலைவராகத் ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்வு

ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் நட்டா (ஜே.பி. நட்டா) அக்கட்சியின் புதிய தலைவராகியுள்ளார்