'அட்டக்கத்தி' தினேஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,February 21 2020]

அட்டக்கத்தி தினேஷ் நடித்த ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் தற்போது ‘வாராயோ வெண்ணிலவே’, ‘பல்லு படாம பாத்துக்கோ’ மற்றும் ‘நானும் சிங்கிள் தான்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் அடுத்த படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கதிர், ஓவியா, வேல ராமமூர்த்தி, கலையரசன் உள்பட பலரது நடிப்பில் ஜிவி பிரகாஷ் தயாரிப்பில் உருவான ’மதயானைக்கூட்டம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் சுகுமாறன் இயக்கும் இந்த படத்திற்கு ‘தேரும் போரும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விக்ரம் சுகுமாரன் இயக்கும் அடுத்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சுகுமார் ஒளிப்பதிவில் ராஜீவன் கலை இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகர் இசையில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் உள்பட மற்ற விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

மதுரையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி – ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. முதல் முறையாக மதுரை

'இந்தியன் 2' விபத்து: ஃபெப்சி நிறைவேற்றிய அதிரடி தீர்மானங்கள்

கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மதுசூதனன் ஆகிய மூன்று பேர் பரிதாபமாக பலியாகியுள்ள நிலையில்

'இந்தியன் 2' விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் சாங் 'இந்தியன் 2'திரைப்படத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா

அஜித்தின் அறிமுகம் எனது மனைவியால் தான் கிடைத்தது: பிரபல தயாரிப்பாளர் 

தனது மனைவி ஸ்ரீதேவியால் தான் தனக்கு அஜித்தின் அறிமுகம் கிடைத்தது என பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 

யோகி பாபுவிடம் மன்னிப்பு கேட்ட துணை நடிகை: பரபரப்பு தகவல்

நடிகர் யோகிபாபுவுக்கு மஞ்சுபார்கவி என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் அவரை ஒருதலையாக காதலிப்பதாக அவரது திருமணம் குறித்து அழுதுகொண்டே துணை நடிகை சுஜி