close
Choose your channels

பார்வையற்ற பார்வையாளர்களுக்காக சிறப்பு முயற்சி எடுக்கும் 'மாயோன்' படக்குழு!

Thursday, October 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிபி சத்யராஜ் நடிப்பில் கிஷோர் என்பவர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாயோன்’ திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆளரவமற்ற கோவில் ஒன்றில் மர்மமான நிகழ்வுகள் நடைபெறுகிறது என்பதும் அந்த மர்மங்களை கண்காணிக்க முயற்சி செய்யும் கூட்டம் ஒன்றுக்கும் அந்த கோவிலில் உள்ள ரகசியத்தை காக்க முயற்சிக்கும் ஹீரோவுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த கதை என்றும் கூறப்படுகிறது

கற்பனைக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்யங்கள் அந்த கோவிலில் இருக்குது தம்பி என்ற வசனத்துடன் வெளியாகியுள்ள இந்த டீசர் அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜாவின் மிரட்டலான இசையில் ராம்பிரசாத் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சிபி சத்யரஜ் ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார் பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த படத்தை பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் ரசிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியையும் ஆடியோ மூலம் விளக்கும் புதிய முயற்சி ஒன்றை படத்தின் தயாரிப்பாளரும், இந்த திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவருமான அருண்மொழி மாணிக்கம் சிந்தித்து அதனை சாத்தியப்படுத்தியதும் மிகவும் பாராட்டுக்குரியது,  ஏற்கனவே இதே போன்ற முயற்சியை டீசரிலும் செய்துள்ள படக்குழுவினர் படம் முழுவதும் அந்த முயற்சியை செய்து உள்ளதாக தெரிகிறது. இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.