மனைவியிடம் திட்டு வாங்கிய ஆஸ்திரேலிய பவுலர்.. காரணம் அஸ்வின்?

  • IndiaGlitz, [Thursday,February 16 2023]

பிரபல ஆஸ்திரேலிய பந்துவீச்சுவாளர் தான் மனைவியிடம் திட்டு வாங்கியதாகவும் அதற்கு அஸ்வின் தான் காரணம் என பேட்டி ஒன்றில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான டெஸ்ட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்தியா வீழ்த்தியது என்பது தெரிந்ததே. இந்த வெற்றிக்கு இந்தியாவின் சுழற் பந்துவீச்சாளர்கள் முக்கிய காரணம் என்பதும் குறிப்பாக அஸ்வின் எடுத்த 8 விக்கெட்டுகள் இந்தியாவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் நேதன் லயன் பேட்டி ஒன்றில் கூறியபோது நான் இந்தியா வருவதற்கு முன்பே அஸ்வின் பந்துவீச்சை லேப்டாப்பில் பலமுறை திரும்பத் திரும்ப பார்த்தேன். அதை பார்த்து என் மனைவி என்னை திட்டினார் என்று கூறினார்.

மேலும் எதிரணி பவுலராக இருந்தாலும் அஸ்வின் இடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றது என்றும் அவரிடம் இருந்து சில விஷயங்களை கண்டு கொண்டாலும் தனக்கு பெரிது உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அஸ்வினிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன், என்னிடம் நிறைய விஷயங்களை அவர் பகிர்ந்து உள்ளார், இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு மண்ணில் சந்தித்தால் கூட நாங்கள் நிறைய பேசுவோம், அவரை பார்க்கும் போது சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

விஜய் பட நாயகியுடன் செம டான்ஸ் ஆடும் மீனா.. வைரல் வீடியோ!

 விஜய்யுடன் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த நடிகையுடன் நடிகை மீனா செம டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

செம குத்தாட்டம் போடும் சிவகார்த்திகேயன்.. 'மாவீரன்' வீடியோ வைரல்..!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

லைகாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. அஜித் ரசிகர்கள் குஷி..!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தனது 24 வது தயாரிப்பு திரைப்படத்தின் அறிவிப்பை நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

லிப்லாக் காட்சியில் நடித்தது ஏன்? அனிகா சுரேந்திரன் விளக்கம்..!

அஜித்தின் 'என்னை அறிந்தால்' 'விஸ்வாசம்' ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் நாயகியாக நடித்து வரும் திரைப்படம் 'ஓ மை டார்லிங்' . இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி

லோகேஷ் கனகராஜின் LCUவில் இணைகிறாரா ரஜினிகாந்த்? சூப்பர் தகவல்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக