கம்பேக் கொடுத்த ஆஸ்திரேலியா… ஐசிசி கோப்பை வென்று சாதனை!

இந்த ஆண்டு ஐசிசி தரவரிசையில் 6 ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. டி20 உலகக்கோப்பை அறிவிக்கப்பட்டபோது தரவரிசையில் பிந்தியிருந்த இந்த அணி தற்போது முதல் முறையாக கோப்பையை வென்று மீண்டும் ஒருமுறை தன்னுடைய பலத்தை காட்டியிருக்கிறது.

துபாயில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வுசெய்தது. அப்போதே நியூசிலாந்து வெற்றிப்பெறுவது கடினம்தான் என்று ரசிகர்கள் கணிப்பை வெளியிட்டு வந்தனர். இதையடுத்து கடினமாக விளையாடிய நியூசிலாந்து மிகப்பெரிய சரிவைத் தாண்டி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை குவித்திருந்தது.

இதனால் 173 என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதல் 4 ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். இதனால் சிறிது தடுமாறிய அந்த அணி பின்னர், டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ்ஷின் அசுரத்தனமான விளையாட்டால் 18.5 ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது. இதனால் டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி தட்டிச்சென்றுள்ளது. இதில் ஆட்டநாயகன் விருது மிட்செல் மார்ஷ்ஷுக்கும் தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கும் அறிவிக்கப்பட்டது.

ஐசிசி நடத்தும் ஒருநாள் போட்டி, டி20 போட்டி, சாம்பியன் டிராபி போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலியா 8 கோப்பைகளை வென்றுள்ளது. 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் ஒருநாள் போட்டிக்கான கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 2006, 2009 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் டிராபி கோப்பையை தட்டிச்சென்றது. தற்போது முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று அந்த அணி மீண்டும் கம்பேக் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

டி20-யில் வெளுத்து கட்டிய டேவிட் வார்னர்… கண்ணீரில் தத்தளிக்கும் SRH!

ஐபிஎல் 14 ஆவது சீசன் போட்டியின் முதல்பாதியில் சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிப்பெற்றது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'

இன்று பூமிக்கு வந்த ஆசை மகளுக்கு என் முதல் பரிசு: தமிழ் நடிகரின் டுவிட்!  

இன்று பூமிக்கு வந்த என் ஆசை மகளுக்கு என்னுடைய முதல் பரிசு என தமிழ் நடிகர் ஒருவர் புகைப்படத்துடன் கூடிய ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

இவனெல்லாம் கேப்டனாக வந்தால் வீடு விளங்காது: இமான் அண்ணாச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 42 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று 43வது நாள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை புதிய கேப்டனை தேர்வு செய்யும் படலம்

பார்வதி அம்மாளுக்கு சூர்யா செய்த மகத்தான உதவி!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ராசாக்கண்ணு மற்றும் செங்கனி கேரக்டர்கள் உண்மையாக வாழ்ந்தவர்கள் என்பதும் ராசாக்கண்ணு