close
Choose your channels

ரசிகர்கள் முட்டாள்கள் அல்ல: 'ஆட்டோகிராப்' ரீரிலீசில் ரன்னிங் டைம் குறைப்பு சேரன்..

Tuesday, May 20, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சேரன் நடித்து இயக்கிய ‘ஆட்டோகிராப்’ திரைப்படம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், ஒரிஜினல் ரன்னிங் டைமிலிருந்து 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2004ஆம் ஆண்டு, சேரன், சினேகா, கனிகா, மல்லிகா நடித்த ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்கும் போது, தங்களுடைய வாழ்வில் நடந்த சம்பவங்களைப் போலவே உணர்ந்ததாக கூறியதன் விளைவாக, இந்த படம் வசூலை வாரி குவித்தது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் ஆட்டோகிராப் ரி-ரிலீஸ் ட்ரெய்லர் வெளியானது. இதன் மூலம், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால், அதே நேரத்தில் இந்த படம் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சில மாற்றங்களுடன், ஒலி மற்றும் பிற ரீவொர்க்கிங் செய்யப்பட்டுள்ளது என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.

"இன்றைய தொழில்நுட்பத்துக்கு ஏற்றபடி 'ஆட்டோகிராப்' ரீவொர்க் செய்திருப்பதாக கூறிய அவர் இவ்வளவு தூரம் சிரமம் எதற்காக என்றால், இன்றைய பார்வையாளர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் மிகவும் புத்திசாலிகள் ரசிகனை ஏமாற்றுவது போல் தோன்றினால், அவர்களுக்கு படம் பிடிக்காது. எனவே, முழு பொறுப்போடு இந்த படத்தை தர வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு உழைத்து வருகிறோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த படத்தின் ஒரிஜினல் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆக இருந்த நிலையில், தற்போது 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைமாக இருக்குமென்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment