சோம்பேறி விருதை வாங்க மறுத்த ஓவியா: மீண்டும் சினேகனுடன் மோதல்

  • IndiaGlitz, [Saturday,July 01 2017]

பிக்பாஸ் குழுவின் கேப்டன் சினேகனுடன் ஏற்கனவே மோதலில் ஈடுபட்டிருந்த நடிகை ஓவியா நேற்று விருது வழங்கும் விழாவில் மீண்டும் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு 'சோம்பேறி' விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அவர் தனக்கு கொடுத்த வேலையை செய்யாமல் காலம் தாழ்த்தியதால் இந்த விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விருதை தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஓவியா மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தான் ஒரு சோம்பேறி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஓவியா கூறினார்.

மேலும் இந்த விழாவில் ஹைஜீனிக் என்ற சுத்தமான விருது நமீதாவுக்கும், கடின உழைப்புக்கான விருது காயத்ரி ரகுராமுக்கும், டிஸ்ஹானஸ்ட் என்ற நேர்மையற்றவர் விருது நடிகர் பரணிக்கும், ஜூலியானாவுக்கு 'சுத்தமில்லாதவர்' விருதும் வழங்கப்பட்டது.

More News

கோவிலில் பிச்சையெடுத்த 'காதல்' பாபுவுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?

பாலாஜி சக்திவேல் இயக்கிய 'காதல்' படத்தில் நடித்த விருச்சிககாந்த் என்ற பாபு, வறுமையின் பிடியில் சிக்கி கோவில் ஒன்றில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருவதாக கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே....

ஜிஎஸ்டி வரி எதிரொலி: தியேட்டர் உரிமையாளர்களின் அதிரடி முடிவு

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதனால் பெரும்பாலான வணிகங்கள் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக திரைத்துறையினர்களுக்கு கடும் பாதிப்பு இருப்பதால் திரைத்துறையினர், திரையரங்க உரிமையாளர்கள் இந்த புதிய வரிவிதிப்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

ஜிஎஸ்டி: சென்னையில் ஆன்லைன் புக்கிங் திடீர் நிறுத்தம்

இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படுகிறது. எனவே நாளை முதல் பல்வேறு பொருட்களின் விலை மற்றும் கட்டணங்களில் பெரும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

'விக்ரம் வேதா' படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்சார் அதிகாரிகள்

முதன்முதலாக மாதவன் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்த 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது...

தமிழ் சமூகத்தை சீரழிக்கிறார் ஜூலியானா! சீறும் இந்து மக்கள் கட்சி

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருபக்கம் சீரியல் போல காமெடியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் செய்ய போவதாக இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது...