'அயலி' படத்தின் அம்மா நடிகையா இவர்?  வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,February 14 2023]

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘அயலி’ படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த நடிகையின் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் அரிதாக வரும் வித்தியாசமான கதைய அம்சம் கொண்ட படங்களில் ஒன்று ‘அயலி’ என்பதும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையை ஏற்படுத்திய இந்த படம் வசூலையும் வாரி குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் சமூகத்தின் மூட பழக்கவழக்கங்கள், அந்த நம்பிக்கைக்கு எதிராக அந்த பெண் நடத்தும் போராட்டம், பெண்களின் கல்வி ஆகியவை குறித்து மிக அருமையாக இந்த படம் பேசியிருந்தது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கேரக்டரில் நடித்திருந்த சிறுமியின் அம்மாவாக நடித்திருந்தவர் நடிகை அனுமோல். மலையாள நடிகையான இவர் ’சூரன்’ ’திலகர்’ ’ஒருநாள் இரவில்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் அனுமோலின் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘அயலி’ படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த நடிகையா இவர்? என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

திருமணம் எப்போது? காதலர் தினத்தில் செம அறிவிப்பை வெளியிட்ட அமிர்-பாவனி..!

 பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக இருந்த அமீர் மற்றும் பாவனி பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் அந்த காதல் வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து

'ஜவான்' படத்தில் ஒரு ரோலக்ஸ்.. விஜய்க்கு பதில் இந்த பிரபல நடிகரா?

'ஜவான்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தளபதி விஜய் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக வேறொரு பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

கவினை காதலிக்கின்றாரா விஜய் பட நடிகை? இன்ஸ்டாகிராம் பதிவால் குழம்பிய ரசிகர்கள்..!

விஜய் படத்தில் நடித்த நடிகை ஒருவர் கவின் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இருவரும் காதலிக்கின்றார்களா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

'கேப்டன் மில்லர்' இயக்குனர் வெளியிட்ட மாஸ் புகைப்படம்.. தனுஷ் ரசிகர்கள் குஷி..!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்து புகைப்படங்களை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்

அடுத்தடுத்து 3 வெற்றிப்படங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தகவல்..!

அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.