திருமணத்திற்கு முன் உறவு நல்லது: இன்று வெளியாகியுள்ள படத்தின் ஹீரோ கருத்து

  • IndiaGlitz, [Friday,September 01 2017]

திருமணத்திற்கு முன் உறவு வைத்து கொள்வது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா என்பவர் திருமணத்திற்கு முன்பு உறவு கொள்ள வேண்டும் என்பதை ஊக்குவிப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவர் நடித்த 'ஷுப் மங்கள் சாவ்தன்' என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர் தனது பேட்டியில் தண்ணீருக்குள் குதிப்பதற்கு முன்பு அது எப்படி என்று தெரிந்து கொள்வது நல்லது என்பது போன்று, திருமணத்திற்கு முன்பு உறவு கொள்வதை வலியுறுத்துவதாக கூறியுள்ளார். திருமணத்திற்கு பின்னர் ஆணுக்கு பாலியல் பிரச்சனை என்றால் சத்தமில்லாமல் இருந்துவிடும் இந்த சமூகத்தினருக்காகவே இதை தான் வலியுறுத்துவதாகவும் ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.

More News

புளூவேல் கேம்: தானாக முன்வந்து விசாரணையை தொடங்கிய ஐகோர்ட்

உலகையே ஆட்டிப்படைத்து வரும் புளுவேல் கேமினால் தற்கொலை செய்துவரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்...

வெளியானது விஷாலின் அடுத்த படத்தின் டிரைலர்

நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க பணிகள், தங்கையின் திருமணம் ஆகியவற்றின் பிசியிலும் விஷால் தற்போது 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மோகன்லால் நடித்து வரும் 'வில்லன்' என்ற மலையாள படத்தில் விஷால் முதல்முறையாக வில்லனாக நடித்து வருகிறார்...

'பிக் ஸ்டார்' ஓவியாவின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்

பிக்பாஸ் வீட்டில் ஒரே ஒரு மாதம் மட்டுமே இருந்த ஓவியா, இன்று உலகப்புகழ் பெற்றுவிட்டார். மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறிய ஓவியா, திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்...

சட்டையை மாற்றினாலும் பாம்பு பாம்புதான்: ஜூலி குறித்து ஆர்த்தி

பிக்பாஸ் பார்வையாளர்களால் அதிகளவு வெறுக்கப்பட்ட ஜூலி மீண்டும் ரீஎண்ட்ரி ஆனது ஏற்கனவே தள்ளாடி கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியை குழிதோண்டி புதைக்கும் வகையில் உள்ளது...

பெனாசிர் பூட்டோ வழக்கில் திடீர் திருப்பம்: பர்வேஸ் முஷரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்...