டெல்லியை அடுத்து சென்னை: ஒருமாத போராட்டத்தை தொடங்கினார் அய்யாக்கண்ணு

  • IndiaGlitz, [Friday,June 09 2017]

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சமீபத்தில் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 41 நாட்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கடைசி வரை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் சென்னை திரும்பிய விவசாயிகள் இன்று முதல் ஒரு மாத போராட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளனர்.

இன்றைய முதல் நாளில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அரை நிர்வாணத்துடன் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு உள்பட விவசாயிகள் குழு தொடர்ந்து டெல்லியை போலவே வித்தியாசமான முறையில் தினமும் போராட்டத்தை தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போராட்டம் ஜூலை 10ஆம் தேதி வரை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த போராட்டம் குறித்து அய்யாக்க்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியபோது, 'வரலாறு காணாத அளவிற்கு தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வறட்சி நிவாரணம் கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு, தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது.

விவசாயிகளின் கருகிய பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி இருக்கிறது. விவசாயிகளுக்கு தற்போது வாழ்வதா அல்லது சாவதா என்று தெரியவில்லை.

தேர்தல் வரும் நேரத்தில் எல்லாம் விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு என்று கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்தால் விவசாயிகளை அடிமைகள் போல நடத்துகிறார்கள். டெல்லியில் நாங்கள் 41 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். ஆனால் ஆளும் மத்திய அரசோ எங்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. டெல்லியில் நிர்வாணமாக ஓடிவிட்டோம், இங்கேயும் நிர்வாணமாக ஓட விட வேண்டாம். இனி வாழ்ந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. சாவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களைக் காப்பாற்றுங்கள்' என்று கூறினார்.

More News

ஆபத்தானவர் பட்டியலில் வைகோ! நாட்டிற்குள் நுழையவும் தடை: மலேசியா அதிரடி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் மீது இந்தியாவிலும் இலங்கையிலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...

இந்தியில் ஜீரோ, தமிழில் எட்டு: சூர்யாவுக்கு ஆச்சரியம் அளித்த அனிருத்

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்த நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக இணையும் சூர்யா-கார்த்தி

கோலிவுட் திரையுலகில் சூர்யா, கார்த்தி சகோதரர்கள் இருவருமே முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நிலையில் இருவரும் இணைந்து விரைவில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்...

இந்திய அரசும், இந்திய கிரிக்கெட் அணியும் ஒன்று! எப்படி தெரியுமா?

ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் கடந்த ஞாயிறு அன்று பாகிஸ்தான் அணியை பந்தாடிய இந்திய அணி, நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் எதிர்பாராத தோல்வியை அடைந்தது...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணியுங்கள்: தமிழக அரசியல்வாதிகளுக்கு பிரபல இயக்குனர் வேண்டுகோள்

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகின்றன. இந்த குழப்ப நிலையை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு பின்னர் அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்...