'சிறைச்சாலை ஒரு பூஞ்சோலை': சிறைக்கு செல்லுமுன் வீரவசனம் பேசும் பிக்பாஸ் போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் சரியாக விளையாடாத இரண்டு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் இந்த வாரம் சரியாக விளையாடாத அசீம் மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் சிறைக்கு செல்லுமாறு பிக்பாஸ் கட்டளையிடுகிறார். இதனையடுத்து இருவரும் சிறைக்கு செல்கின்றனர்.

’சிறைச்சாலை ஒரு பூஞ்சோலை’ என மைனாவிடம் வீர வசனம் அசீம் பேசியபோது அவரை சட்டை செய்யாமல் ‘சீ போ’ என கடந்து போகிறார். அதே போல சிறை உடை அணிந்த பிறகு சக போட்டியாளர்கள் மத்தியில் டான்ஸ் ஆடி ஜாலியாக ஷிவின் சிறைக்கு செல்கிறார்.

வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சிறைச்சாலை என்றால் அடுத்த வாரம் முதல் வேலையே செய்ய மாட்டேன் என சிறைக்குள்ளிருந்து அசீம் பேசுவதை கேட்டு விக்ரமன் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

கடந்த வாரம் ராம் மற்றும் ஜனனி ஆகிய இருவரும் சிறையில் தள்ளப்பட்ட நிலையில் அவர்கள் அநியாயமாக தாங்கள் சிறைக்குள் தள்ளப்பட்டதாக கமல்ஹாசனிடம் முறையிட்டனர். கமல்ஹாசனும் அதனை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரம் சிறை சென்றுள்ள அசீம் மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் கமல்ஹாசனிடம் இது குறித்து என்ன கூறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பிரபல நடிகையுடன் விஷால் திருமணமா? அவரே அளித்த விளக்கம்!

 தமிழ் சினிமாவில் 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிள் ஆக இருந்து வரும் நடிகர் விஷால் பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து விட்டதாகவும் இது குறித்த புகைப்படங்கள்

குயின்சியை ஓட ஓட விரட்டும் ஷெரினா.. என்ன காரணம்?

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக பொம்மை டாஸ்க் காரணமாக போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சீரியசாக இருந்தாலும் இடையிடையே சில குஷியான காட்சிகளும் இடம்பெற்றுக் கொண்டுதான்

'தெறி'யில் பார்த்த அதே விஜய்யை பார்க்கலாம்: 'வாரிசு' குறித்து ஸ்டண்ட் இயக்குனர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மருத்துவ சிகிச்சைக்கு காத்திருக்கும் பெண்: மிகப்பெரிய தொகை கொடுத்த கலைப்புலி எஸ் தாணு!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைபுலி எஸ் தாணு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஒருவருக்கு 5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ள தகவல் வைரலாகி வருகிறது. 

நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்: மணமகளுடன் மாஸ் புகைப்படம்!

நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான ஹரிஷ் கல்யாணுக்கு இன்று திருமணம் நடந்த நிலையில் மணமகளுடன் ஹரிஷ் கல்யாண் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.