மூன்றாவது வாரத்திலும் வசூலில் சாதனை புரிந்த மகிழ்மதி மன்னன்

  • IndiaGlitz, [Monday,May 15 2017]

உலகம் முழுவதும் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றது மட்டுமின்றி, வசூலிலும் சாதனை புரிந்த எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான படைப்பான 'பாகுபலி 2' திரைப்படம் மூன்று வாரங்கள் ஆகியும் திருப்திகரமான வசூலை இன்னும் கொடுத்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு வார சென்னை வசூல் சாதனை குறித்து நாம் பார்த்துள்ளோம். தற்போது மூன்றாவது வார இறுதி சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

இந்த படம் கடந்த வார இறுதியில் சென்னையில் 19 திரையரங்குகளில் 412 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,46,71,330 வசூலித்துள்ளது. மூன்றாவது வாரத்திலும் மகிழ்மதி மன்னனை பார்க்க 85% பார்வையாளர்கள் திரையரங்குகளில் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் கடந்த மாதம் 28ஆம் தேதியில் இருந்து நேற்று வரை ரூ.11,71,32,430 வசூல் செய்து சென்னையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் மூன்று மொழிகளின் மொத்த வசூல் ரூ.13,44,17,810 என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினிக்கு வந்த மிரட்டல் கடிதத்திற்கு தனுஷ் அதிரடி பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ள 'ரஜினி 161' திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை மும்பை டான் ஹாஜி மஸ்தான் கதை என்று ஊடகங்களில் செய்திகள் கசிந்தது. இதையறிந்த ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சமீபத்தில் ரஜினிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கடித&#

உலக சாதனை செய்தது எனது முதல் படம். கமல் மகள் பெருமிதம்

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த டீசர் வெளியான மூன்று நாட்களில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று உலக சாதனை செய்துள்ளது...

சென்னையில் முதல் சுரங்க மெட்ரோ ரயில் தொடங்கியது

சென்னையில் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான 7.4 கிலோ மீட்டர் தூர  சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் பயணிகள் சேவை இன்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் இந்த சுரங்கப்பாதையை திறந்து வைத்தனர்...

தமிழக மக்கள் தொகையில் 8ல் ஒன்று. விவேகம் செய்த மகத்தான் சாதனை

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள 'விவேகம்' படத்தின் டீசர் கடந்த 11ஆம் தேதி வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முந்தைய 'கபாலி' சாதனை உள்பட பல சாதனைகளை பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும், லைக்ஸ்களிலும் உடைத்தெறிந்தது...

பாடகி சுசிலீக்ஸ் விவகாரம்: சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...