'கட்டப்பா'வின் இன்னொரு ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு

  • IndiaGlitz, [Monday,May 08 2017]

'பாகுபலி' முதல் பாகத்தை பார்த்த லட்சக்கணக்கான ரசிகர்கள், 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்ற ரகசியத்தை இரண்டு வருடங்களுக்கு பின்னர் கடந்த வாரம் தெரிந்து கொண்டனர். இந்த நிலையில் கட்டப்பா கேரக்டரில் நடித்த சத்யராஜ் குறித்த ரகசியம் ஒன்றை நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில், 'சத்யராஜ் அவர்களை தவிர வேறு யாராவது கட்டப்பா கேரக்டரில் நடித்திருந்தால் பாகுபலிக்கு இவ்வளவு பெரிய ஹிட் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நான் ஒரு ரகசியத்தை சொல்லப்போறேன். சத்யராஜூக்கு ஜோடியாக அதிக படங்களில் நான் தான் நடித்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். கொடுக்கப்பட்ட கேரக்டரை உள்வாங்கி கொண்டு அந்த கேரக்டராகவே மாறிவிடுவதில் அவர் வல்லவர். 'பெரியார்' படத்தில் மிக அற்புதமாக நடித்திருந்தும் அவருக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றமே. ஆனாலும் இந்த முறை அவருக்கு கட்டப்பா கேரக்டர் விருதை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன்' என்று மேலும் குஷ்பு கூறியுள்ளார்.

சத்யராஜூடன் இணைந்து குஷ்பு 'புரட்சிக்காரன்', வீரநடை', 'உன்னை கண் தேடுதே', 'பிரம்மா', 'கல்யாண கலாட்டா', ரிக்சா மாமா', 'பெரியார்', 'மலபார் போலீஸ்', 'நடிகன், 'வெற்றிவேல் சக்திவேல்', 'சுயம்வரம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

சென்னை வடபழனி பகுதியில் சிவன் கோவில் தெற்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர்...

நீட் தேர்வில் அராஜகத்தின் உச்சகட்டம். உள்ளாடையை அகற்றி சோதனை செய்த கொடுமை

நேற்று இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வு சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட 8 மாநகரங்களில் நடைபெற்றது...

'பாகுபலி 2' சுனாமியிலும் தப்பிய தனுஷ்-தன்ஷிகா படங்கள்

கடந்த மாதம் 28ஆம் தேதி இந்தியாவின் 90% திரையரங்குகளில் 'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தின் சுனாமி வசூல் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதையும், ஒருசில படங்களின் வசூல் அடிபட்டதும் அனைவரும் அறிந்ததே...

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'பாட்ஷா' நாயகி திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கடந்த சில மாதங்களாகவே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்து வருகின்றனர். விரைவில் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினியை அரசியலுக்கு இழுக்க பாஜக உள்பட பல கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன...

ஒவ்வொரு ரசிகரையும் ஆரத்தழுவி மகிழ்கிறேன். 'பாகுபலி 2' வெற்றிக்கு பிரபாஸ் நன்றி

இந்திய திரையுலகில் ரூ.1000 கோடி வசூல் செய்த படம் கொடுத்த ஒரே நாயகன் என்ற பெருமையை பெற்றவர் 'பாகுபலி' புகழ் பிரபாஸ். இந்த படங்களின் இரண்டு பாகங்கள் வருவதற்கு முன்னர் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமே பிரபலமாக இருந்த பிரபாஸ், இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் உலகமே பேசும் நாயகனாகிவிட்டார்...