'பாகுபலி 2' படத்தின் கிளைமாக்ஸ் பிரமாண்டமான திட்டம்

  • IndiaGlitz, [Tuesday,June 07 2016]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய பகுதியான கிளைமாக்ஸ் படப்பிடிப்பு வரும் 13ஆம் தேதி தொடங்கவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் Shobu Yaralagada தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திலும் பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும், மொத்தம் 10 வாரங்கள் கிளைமாக்ஸ் படப்பிடிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தில் இரண்டு முக்கிய ரகசியங்கள் வெளிப்படவுள்ளது. அனுஷ்காவின் இளமைக்கால வாழ்க்கையில் நடந்தது என்ன? மற்றும் பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார்?. இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் வகையில் 'பாகுபலி 2' இருக்கும் என்பதால் முதல் பாகத்தின் வசூலை இந்த படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பெங்களூர் விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு அவமரியாதையா? விரிவான தகவல்

1000 திரைப்படங்களுக்கு இசையமைத்து உலக சாதனை படைத்த இசைஞானி இளையராஜா பெங்களூர்...

'கபாலி' இசைவெளியீட்டு விழாவில் திடீர் மாற்றமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 12ஆம் தேதி நடைபெறும்...

'இறைவி' பிரச்சனை குறித்து ஞானவேல்ராஜா கருத்து

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' திரைப்படத்தில் தயாரிப்பாளர்களை அவமதிக்கும் வகையில் கருத்து கூறப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் இயக்குனர்...

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' சென்சார் தகவல்கள்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள...

சூர்யாவின் 'சிங்கம் 3' கிளைமாக்ஸ்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கி வரும் சிங்கம் 3' என்ற 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...