பாகுபலி 2' ரிலீஸ் தேதி. அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 02 2016]

இந்தியாவின் மிக பிரமாண்டமான திரைப்படமான 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் சூப்பர் ஹிட் ஆனது. விரைவில் இந்த படம் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


இந்நிலையில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார். முதல் பாதியின்போதே இரண்டாம் பாகத்துக்கு தேவையான பல முக்கிய காட்சிகளை எடுத்து முடித்துவிட்ட இயக்குனர், தற்போது மீதியுள்ள படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள 'பாகுபலி 2' படத்தின் ரிலீஸ் தேதி வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற மர்மத்தை தெரிந்து கொள்ள இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஹாலிவுட்டுக்கு செல்லும் கோலிவுட் நடிகை

பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் இருந்து ஹாலிவுட்டுக்கு செல்லும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி வருகிறது...

சூர்யாவின் '24' டீசர் விமர்சனம்

முதன்முதலாக சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள '24' படத்தின் டீசர் வரும் வெள்ளியன்று மாலை 6 மணிக்கு...

அடுத்த வாரம் முதல் கிக்கை ஏற்றுகிறார் ஜி.வி.பிரகாஷ்

கோலிவுட் திரையுலகில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பாலன்ஸ் செய்து வரும் ஜி.வி,.பிரகாஷ், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படத்திற்கு இசையமைத்து கொண்டே...

ஷங்கரின் '2.0;வில் புகுந்த ராணுவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்திற்காக பலகோடி மதிப்புள்ள பிரமாண்ட...

சென்னை, மலேசியாவை அடுத்து காஷ்மீர் செல்லும் விக்ரம் குழுவினர்

முதல்முறையாக விக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் சென்னை...