'பாகுபலி 2' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,August 05 2016]

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராகிய எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தின் வசூல் ரூ.600 கோடியை கடந்துள்ள நிலையில் சமீபத்தில் சீனாவில் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியாகி அங்கும் நல்ல வசூலை அள்ளியது.
மேலும் முதல் பாகத்தை விட அதிக பிரமாண்டமாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜமெளலி இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாகவும் சுமார் அரைமணி நேரம் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வடமாநில ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள கரண்ஜோஹர் இன்று தனது சமூக வலைத்தளத்தில் 'பாகுபலி 2' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அவர் பதிவு செய்துள்ளார். பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்ற மர்மமான கேள்விக்கு விடை கிடைக்கும் நாள் தெரிந்துவிட்டதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More News

மலேசியாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 'கபாலி'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படத்தின் வசூல் குறித்து...

முதல்முறையாக இணையும் சிம்பு-பிரபுதேவா

கோலிவுட்டின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிம்புவும், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற புகழுடன் நடிப்பு...

ஒரே நாளில் இரண்டு 'திருநாள்' கொண்டாடும் ஜீவா

கிராமத்து ரெளடி 'பிளேடு' பாத்திரத்தில் ஜீவா நடித்துள்ள 'திருநாள்' இன்று வெளியாகிறது. கடந்த சில வருடங்களாக இறக்கத்தில் இருந்து வரும் ஜீவாவுக்கு...

ரூ.600 கோடி இலக்கை தொட்ட 'கபாலி. ஒருசில ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி...

'சவரக்கத்தி' படத்திற்காக மிஷ்கின் எடுத்துள்ள புதிய முயற்சி

பிரபல இயக்குனர் மிஷ்கின் ஒரு நல்ல இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக இதுவரை தன்னை மெருகேற்றி கொண்டிருக்கும் நிலையில்...