எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2': டிராக்லிஸ்ட் வெளியீடு

  • IndiaGlitz, [Saturday,April 08 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்களின் டிராக் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. கீரவானி இசையில் இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

1. பலே பலே பலே' என்று தொடங்கும் முதல் பாடலை மதன் கார்க்கி எழுத அதை டெலர் மெஹந்தி, மரகதமணி, மெளனிமா ஆகியோர் பாடியுள்ளனர்.

2. ஒரே ஒரு ஊரில் என்ற பாடலை மதன் கார்க்கி எழுத அதை மோஹனா மற்றும் திபு பாடியுள்ளனர்.

3. 'கண்ணா நீ தூங்கடா' என்ற பாடலை மதன் கார்க்கி எழுத அதை நயனா நாயர் பாடியுள்ளார்.

4. 'வந்தாய் அய்யா' என்ற பாடலை மதன் கார்க்கி எழுத கால பைரவா பாடியுள்ளார்

5. ஒரு யாகம்' என்ற பாடலை மதன் கார்க்கி எழுத காலபைராவா பாடியுள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் நாளை அதாவது ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முக்கிய கோலிவுட் விஐப்பிக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

உலக நாயகன் கமல் வீட்டில் தீ விபத்து. முக்கிய பொக்கிஷங்கள் சேதம்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் மாடிப்படிகளில் இருந்து கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டார். இது அவருக்கு ஒரு சோதனையாக கருதப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சோதனையாக நேற்றிரவு அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது...

விக்ரம்-விஜய்சந்தர் படத்தின் டைட்டில் அறிவிப்பு

சியான் விக்ரம் மற்றும் 'வாலு' இயக்குனர் விஜய்சந்தர் இணைந்து உருவாக்கி வரும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளிவரும் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். அதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது...

என்கிட்டே எதுவும் இல்லை. அவங்களா பார்த்து ஏதாவது கொடுத்துட்டு போனால்தான் உண்டு. ரெய்டு குறித்து சரத்குமார்

பிரபல நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் சிக்கியது என்ன? என்பது குறித்து மாலை தெரியும் என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

எனக்கு விருது கிடைத்ததில் தமிழுக்குத்தான் பெருமை. வைரமுத்து

64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா நடித்த 'தர்மதுரை' படத்தில் கவியரசர் வைரமுத்து எழுதிய 'எந்த பக்கம்' என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது...

64வது தேசிய விருதுகள் முழுவிபரம்

64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. விருதுகளின் முழு விபரத்தை தற்போது பார்ப்போம்...