கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா 'கட்டப்பா' சத்யராஜ்?

  • IndiaGlitz, [Thursday,April 13 2017]

உலகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி 'பாகுபலி 2' திரைப்படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் கர்நாடகத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன் காவிரி பிரச்சனை தொடர்பாக பேசிய சத்யராஜ் கன்னடர்கள் குறித்து சர்ச்சைகுரிய வகையில் விமர்சனம் செய்ததாகவும், எனவே அவர் நடித்த படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம்' என்றும் வாட்டாள் நாகராஜ் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

வாட்டாள் நாகராஜ் கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான கன்னட அமைப்புகள் இருப்பதால் அவருடைய எதிர்ப்பால் கர்நாடக மாநில திரையரங்கு உரிமையாளர்கள் 'பாகுபலி 2' படத்தை ரிலீஸ் செய்ய தயங்கி வருகின்றனர்.

இதேபோல் ஒரு நிலைமை கடந்த சில வருடங்களுக்கு முன் ரஜினி நடித்த 'சிவாஜி' படத்திற்கு ஏற்பட்டபோது ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தற்போது சத்யராஜூக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதால் அவர் மன்னிப்பு கேட்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

என்னையும் விஜய்யையும் இணைத்து இயக்க தகுதியுள்ள ஒரே இயக்குனர் இவர்தான். மகேஷ்பாபு

கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் இளையதளபதி விஜய்.

சூர்யா, கார்த்தி, யுவன் என்னுடைய வகுப்பு தோழர்கள். சொல்வது ஒரு சூப்பர் ஸ்டார்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருப்பவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி.

விஜய்-மகேஷ்பாபு நடிப்பில் 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் திட்டம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் 'ஸ்பைடர்' என்பதை நேற்று பார்த்தோம்.

அஸ்வின் இந்தியர், விவசாயிகள் மட்டும் தமிழர்களா? நிருபரை கலாய்த்த ஆர்ஜே பாலாஜி

நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிகராக மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டவராகவும் இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜெயலலிதா மரணத்திற்கு முந்திய நாள் நடந்தது என்ன? மனோபாலா திடுக்கிடும் தகவல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டாலும், அவர் இறந்த தேதி எது? என்பது குறித்து சர்ச்சைக்குரிய சந்தேகங்களை அவ்வப்போது பலர் எழுப்பி வருகின்றனர்.