எல்லா புகழும் ரஹ்மானுக்கே! எம்.எம்.கீரவானியின் நெகிழ்ச்சியான பதில்

  • IndiaGlitz, [Monday,May 08 2017]

இந்திய திரைப்பட சரித்திரத்தில் இடம்பெற்ற 'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்கு அந்த படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் காரணம் என்றாலும், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானியின் பங்கு கொஞ்சம் அதிகம்தான்.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான காட்சிகளுக்கு பொருத்தமான பின்னணி அமைத்து ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிர் கொடுத்தவர் எம்.எம்.கீரவானி என்றால் அது மிகையாகாது.

இருப்பினும் இந்த படத்தின் பாடல்களில் தென்னிந்தியாவின் முன்னணி பாடகர், பாடகிகளை அவர் பயன்படுத்தாதது ஏன் என்று சமூக வலைத்தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் கூறிய எம்.எம்.கீரவானி, 'இதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்றும், அவர்தான் சின்ன சின்ன பாடகர்களை பெரிய ஆளாக்கியவர் என்றும், அவருடைய வழியை தானும் கடைபிடித்ததாகவும் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானை விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவரான எம்.எம்.கீரவானி, அவர் வழியை பின்பற்றுவதாக கூறுவது அவர், ரஹ்மான் மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கின்றார் என்பதை தெளிவாக காட்டுகிறது.

கடந்த 90ஆம் ஆண்டுகளில் இருந்தே ஏ.ஆர்.ரஹ்மான் ஏராளமான புதிய பாடகர், பாடகிகளை அறிமுகப்படுத்தியவர் என்றும், அவரால் அறிமுகம் செய்யப்பட்ட பலர் இன்று உலக அளவில் பிரபலம் என்பதும் அனைவரும் அறிந்ததே.

More News

'கபாலி'யை முறியடித்த 'பாகுபலி 2', எந்திரனையும் நெருங்குகிறது

இந்திய சினிமாவின் கெளரவம் என்று புகழப்படும் 'பாகுபலி 2' திரைப்படத்தின் பத்து நாள் சென்னை வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தின் பத்து நாள் வசூலை முறியடித்தது என்பதை சிறிது நேரத்திற்கு முன்னர் பார்த்தோம்...

'கட்டப்பா'வின் இன்னொரு ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு

'பாகுபலி' முதல் பாகத்தை பார்த்த லட்சக்கணக்கான ரசிகர்கள், 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்ற ரகசியத்தை இரண்டு வருடங்களுக்கு பின்னர் கடந்த வாரம் தெரிந்து கொண்டனர்...

சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

சென்னை வடபழனி பகுதியில் சிவன் கோவில் தெற்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர்...

நீட் தேர்வில் அராஜகத்தின் உச்சகட்டம். உள்ளாடையை அகற்றி சோதனை செய்த கொடுமை

நேற்று இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வு சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட 8 மாநகரங்களில் நடைபெற்றது...

'பாகுபலி 2' சுனாமியிலும் தப்பிய தனுஷ்-தன்ஷிகா படங்கள்

கடந்த மாதம் 28ஆம் தேதி இந்தியாவின் 90% திரையரங்குகளில் 'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தின் சுனாமி வசூல் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதையும், ஒருசில படங்களின் வசூல் அடிபட்டதும் அனைவரும் அறிந்ததே...